ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் பள்ளி மாணவி தற்கொலை

0
599

தஞ்சாவூரில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
ஒரத்தநாட்டில் உள்ள லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியை கணித ஆசிரியர் சசிகுமார் வெள்ளிக்கிழமை வகுப்புத் தோழர்கள் முன்பாகத் கணக்கை சரிவரச் செய்யவில்லை என்று திட்டியதால் மனமுடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடு திரும்பிய சிறுமி, கணித ஆசிரியர் திட்டியதால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தனது தோழிகளுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பியுள்ளார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் நண்பர்கள் அந்த செய்தியை அவரது பெற்றோருக்கும், வளைகுடா நாட்டில் பணிபுரியும் அவரது தந்தைக்கும் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், தகவல் கிடைத்ததும், சிறுமியின் மாமா சிவக்குமார், ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here