அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 49 பேர் குற்றவாளிகள்

0
450

குஜ­ராத்­தின் அக­மதா­பாத் நக­ரில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் வெடி­குண்டு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. சுமார் 70 நிமிட இடை­வெ­ளி­யில் 21 வெடி­குண்­டு­கள் அடுத்­த­டுத்து வெடித்­தன. இந்த தாக்­கு­த­லில் 56 பேர் கொல்­லப்­பட்­ட­னர். மேலும், 240 பேர் காயம் அடைந்­த­னர். பொது­மக்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் பொது வளா­கங்­கள் மற்­றும் மக்­கள் நட­மாட்­டம் அதி­கம் உள்ள இடங்­களில் நடத்­தப்­பட்ட இந்த தாக்­கு­தல் இந்­தியா முழு­வ­தை­யும் அதி­ர­வைத்­தது. இந்த வழக்­கில் 77 பேர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது. வழக்கு விசா­ரணை சிறப்பு நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்த நிலை­யில் நேற்று தீர்ப்­ப­ளித்த நீதி­மன்­றம், 49 பேரை குற்­ற­வா­ளி­கள் என அறி­வித்­தது. 26 பேர் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here