நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-பிப்., 19ம் தேதி பொது விடுமுறை

0
326

வரும், 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில், பொது விடுமுறை விடப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும், 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இந்த தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடக்கும் பகுதிகளில் மட்டும், வரும், 19ம் தேதி அரசின் பொது விடுமுறை நாளாக அறிவித்து, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அனைத்து விதமான அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் இயங்காது என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here