தஞ்சாவூரில் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இன்று என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே மகர்நோம்புச் சாவடி தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் முகம்மது யாசின் ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA )அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் இருவரும் சமூக ஊடகத்தில் இந்து மதத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கிலாபத் அமைப்பின் தலைவர் மன்னார்குடி பாபா பக்ருதீன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.