சமத்துவ சிலையை தரிசனம் செய்த துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு புதிய இந்தியாவை உருவாக்க நாம் ராமானுஜரின் கொள்கைகளை உள்வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலை ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தரிசனம் செய்த குடியரசு துணைத்தலைவர் ராமானுஜச்சாரியாரின் போதனைகளைப்பின்பற்றி நாம் கொரோனா காலகட்டத்திற்கு பிந்தைய காலத்தில் பொருளாதார் சமத்துவத்தை உருவாக்க பாடுபடவேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் ஸ்ரீ பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷி, மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ அஷ்வினி சௌபே, தெலுங்கானா உள்துறை அமைச்சர் திரு முகமது மஹ்மூத் அலி, ஸ்ரீ திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமி, முதன்மை அறங்காவலர் டாக்டர். ஜே. ராமேஸ்வர ராவ், திரைப்பட நடிகர் ஸ்ரீ சிரஞ்சீவி, , ஸ்ரீ கே.வி சௌத்ரி, ஸ்ரீ ஜி.வி. பாஸ்கர் ராவ், ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ரப்தி தலைவர் (SRSB) எஸ்ஆர்எஸ்பி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.