கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு புறம் ஆளும்கட்சி, மற்றொரு புறத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என, இரண்டு தரப்பினருக்கும் இடையில் அதிகாரிகள் சிக்கி, விழிபிதுங்கி நிற்கின்றனர். யாருக்கு சாதகமாக நடந்தாலும் பிரச்னை என்பதால், செய்வதறியாது தவிக்கின்றனர். இங்கு தேர்தல் பார்வையாளராக பணிக்கு வருவதற்கே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், 15 நாட்களுக்குள் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் கோவையில் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், கோவையில் அரசியல் கட்சியினரிடையே மோதலும், பதற்றமும் அதிகரித்து வருகிறது. அதனால் புதிய பார்வையாளரும் தேர்தல் முடியும் வரை தாக்குப்பிடிப்பாரா என்பது கேள்வியாக உள்ளது.
Home Breaking News கோவையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சம் :15 நாட்களில் 4 தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்