நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த பணப் பட்டுவாடா தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு, ஏராளமானோர் போனில் புகார் தெரிவித்தனர்.
தமிழகம் முழுதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. பிரசாரம் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின், பெரும்பாலான பகுதிகளில் பணப் பட்டுவாடா துவங்கியது.அரசியல் கட்சி வேட்பாளர்கள், தங்கள் வசதிக்கேற்ப, 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை, ஓட்டுக்கு அளித்தனர். தி.மு.க., – அ.தி.மு.க. கட்சிகள் சார்பாக அதிக அளவில் பட்டுவாடா நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
ரொக்கம் தவிர, அரிசி, மளிகை பொருட்கள், கொலுசு, குங்குமச்சிமிழ், ‘ஹாட்பாக்ஸ்’ என, பரிசுப் பொருட்கள் வினியோகமும் ஆங்காங்கே நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளன.