மத்திய பிரதேச மாநிலத்தில் இரு ஊர்களில் மது, இறைச்சி விற்க தடை

0
378

மத்திய பிரதேசத்தில், இரண்டு இடங்களில் மது, இறைச்சி விற்க, மாநில அரசு தடை விதித்து உள்ளது.

இம்மாநிலத்தில்  தமோஹ் மாவட்டத்தில் உள்ள குண்டல்புர், ஜெயின் மதத்தை தோற்றுவித்த வர்த்தமான மஹாவீரர் அவதரித்த இடமாக கருதப்படுகிறது.
இதே மாவட்டத்தில் உள்ள பண்டக்புரில், மிகவும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் வருகின்றனர்.
இந்த இரண்டு ஊர்களிலும் மது, இறைச்சி விற்க மாநில அரசு தடை விதித்து அம்மாநில முதல்வர் சிவ ராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here