சூரியமின்சக்தி பயன் பாட்டை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பமும் 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவும் வகையில் நாம் சொந்தமாக சூரிய மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது தனித்துவமாக மட்டும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
நிலையான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மட்டுமே நிலையான வளர்ச்சி சாத்தியம் என்பதே இந்தியாவின் தொலைநோக்காக உள்ளது என அவர் கூறினார்.