மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுகள்: அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் கண்டெடுப்பு

0
562

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் கி.பி., 13 ம் நுாற்றாண்டை சேர்ந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

ஆய்வில் இரண்டு கல்வெட்டுகளும் கி.பி., 700 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப் பட்டது.

9 வரி கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டரையன் என்பவன் கோவிலுக்கு இவ்வுலகம் உள்ளவரை தானம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கல்வெட்டு 6 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் எல்லை, குளம், இறையிலி போன்ற சொற்கள் இருப்பினும், பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுமையான பொருளை பெற முடியவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here