25 ஆண்டுக்கான பட்ஜெட் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்

0
434

பெங்களூரு:அடுத்த, 25 ஆண்டுகளில், நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு, இந்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டங்களை, மத்திய அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றது.

நாம் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு, இந்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகளை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில், ‘டிஜிட்டல்’ பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு திட்டமும் தனியானது அல்ல. மற்ற திட்டங்களுடன் இணைந்து, பல அம்சங்களை இணைத்து செயல்படுத்த வேண்டும். அதற்காகவே, ‘கதி சக்தி’ எனப்படும் வளர்ச்சிப் பணி களை ஒருங்கிணைத்து வேகமாக செயல்படுத்தும் திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here