கல்வி அவரவர்களுக்கு விருப்பமான மொழியில் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும். குறிப்பாக அடிப்படைக் கல்வி என்பது உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
இந்த தேசத்தை வலுப்படுத்த கல்வி அவசியம். அதனை சரியான முறையில் சரியான நேரத்தில் பெற வேண்டும். கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.
கல்வியைப் பொருத்தவரை மொழித் திணிப்பும் இல்லை, மொழி எதிர்ப்பும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குறிப்பிட்டார்.