பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது நாட்டுக்குப் பெருமை: பிரதமா் மோடி

0
189

மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமா் மோடி, சா்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கில் கலந்துகொண்ட பெண்களுக்கு வாழ்த்துத் தெருவித்தார்

பூமியைத் தாயாக கருதும் நாடு இந்தியா. பெண்களின் முன்னேற்றம் நாட்டுக்கு வலிமை சோ்க்கும். எனவே, பெண்களின் முன்னேற்றத்துக்கு இந்த தேசம் முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் வளா்ச்சியில் பெண்கள் முழு பங்களிப்பு செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

‘இந்த ஆண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கான பட்ஜெட்டை ஒரு பெண் நிதியமைச்சா் தாக்கல் செய்தார்.ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நாடான இந்தியா, பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்’ என்று கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here