மாணவனுக்கு பிரதமர் மோடி பதில்

0
388

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பள்ளி மாணவர் அனுராக் ரமோலா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘பரிக் ஷா பர் சர்ச்சா போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக எங்களை போன்றவர்களை சந்தித்து, அறிவுரைகள் வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளூர் தயாரிப்புக்கு முக்கியத்துவம், தற்சார்பு இந்தியா போன்ற உங்களின் அறிவிப்புகளும் என்னை கவர்ந்துள்ளன’ என கூறியிருந்தர்.
மோடி அனுப்பிய பதிலில்,’தேசத்தின் மீது நீங்கள் வைத்துள்ள பற்று, என்னை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நீங்கள் நன்கு படித்து, தேசத்துக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ என கூறியிருந்தார். ‘தன் கடிதத்துக்கு, பிரதமர் பதில் அனுப்புவார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை’ என, மாணவர் ரமோலா பெருமிதத்துடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here