நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு குறிப்பாக உத்தர பிரதேசம் ஒரு வரலாறு என்று கூற வேண்டும் . 32 வருடத்திற்கு பிறகு ஆளும் கட்சியே பல எதிர்ப்புகளுக்கு பிறகும்கூட அதிக ஓட்டு விகித சதவிகித தோடுஆட்சியை பிடித்துள்ளது .ஆளுங்கட்சி முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு கட்சிகளின் ஓட்டு சதவிகிதமும் சற்று அதிகரித்துள்ளது.இந்தத் தேர்தல் இரு முனை போட்டியாகவே இருந்துள்ளது .ஒரு பக்கம் பாஜகவும் மற்றொரு பக்கம் சமாஜவாதி ராஷ்ட்ரிய லோக் தள் பாரதிய சமாஜ் மற்றும் சில சிறிய கட்சிகள் போட்டி கடுமையானது முடிவுகள் நிச்சயமற்றதாக இருந்தது. ஆனாலும் பாஜக எப்படி வெற்றி பெற்றது எதிர்க்கட்சிகளால் வேலை இல்லா திண்டாட்டம். விலைவாசி உயர்வு , புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துன்பம் இப்படி பல பிரச்சினைகளை கூறியும் கூட மக்கள் யோகியின் பக்கத்திலிருந்து கொஞ்சம்கூட விலகவே இல்லை .இதற்கெல்லாம் ஒரே விடை இந்திய அரசியலில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில், அரசியலில் ஒரு உருமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தான் . ஜாதி அரசியலை தாண்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் போடப்பட்டுள்ளது ஜன்தன் திட்டத்தின் மூலம் மக்களை வங்கி கணக்கு ஆரம்பிக்க வைத்து அரசு உதவி தொகைகளை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியது மாவட்டத்திற்கு ஒரு விவசாய பயிர் என்ற அடிப்படையில் அனைத்து வகையான பயிர்களிலும் மாநிலம் முழுவதும் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுத்தது. மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் முதலீடுகள் அதிகரித்தது. விவசாயிகளுக்கான உதவித்தொகை நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தியது இதையெல்லாம் காரணமாகக் கொள்ளலாம் .கொஞ்சம் கூட ஊழலை சகித்துக் கொள்ளாது ,வசதி குறைந்தவர்களின் வாழ்வாதாரம் படிப்படியாக உயரும் அளவுக்கு திட்டங்கள் போட்டது இவைகள் ஒரு காரணம் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் யோகி ஜி புல்டோசர் பாபா என்று பெயர் ஏற்பட்டும் கூட அவருடைய நேர்மையின் மேல் மக்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. விவசாயிகள் போராட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை மாறாக சென்ற அரசாங்கத்திலிருந்து கரும்புக்கு வரவேண்டிய பணங்கள் விவசாயிக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டது 2013இல் அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஜாட் சமுதாயத்தில் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் ஆகாத நிலையில் கூட எதிர் தரப்பில் உள்ள இஸ்லாமியர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்
இதனால் அந்த ஜாட் சமுதாயத்தினர் யோகிஜிக்கே ஆதரவு கொடுத்தனர். இந்த முறை 71சதவிகித ஜாட். சமுதாயத்தினர் பாஜகவிற்கு வாக்களித்தனர். அரசியல் பற்றி பேசாமல் மனதின் குரல் மூலம் மக்கள் நலனையே கருத்தில் கொண்டு பேசியது கூட மக்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டாக்கியது.மோடி வாக்காளர் என்று கூறிக்கொள்வதில் மக்களும் பெருமை அடைந்தனர். இந்த தேர்தல்வரை தலித் சமுதாயத்தினர் நம்பி பிழைப்பு நடத்திய மாயாவதி அவர்கள் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார் 40 சதவீதத்துக்கும் குறைவான தலித் வாக்காளர்களே மாயாவதிக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தவிடுபொடியானது தரைமட்டமானது .குடும்ப அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பாரம்பரியமான கட்சி இருக்குமிடம் தெரியாமல் ஆகிவிட்டது.மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகி கொண்டிருக்கிறது. அனைவர் எதிர்பார்ப்புகளையும் எப்படிபூர்த்தி செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
– சந்திரசேகர்ஜி
balasekaran66@gmail.com