காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0
374

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள செவாக்லான் பகுதியில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் கமாண்டர் கமால் பாய் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

கந்தர்பால் மாவட்டத்தின் செர்ச் பகுதி மற்றும் குப்வாரா மாவட்டம் நெச்சமா ராஜ்வார் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்; ஒருவர் கைதானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here