ஜனவரியில் பொறியியல் சாதனங்கள் துறையில் மந்த நிலை காணப்பட்ட போதிலும், சுரங்கம், உற்பத்தி துறைகளின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து, அந்த மாதத்தில் தொழிலக உற்பத்தி குறியீடு (ஐஐபி) 1.3 சதவீதமாக அதிகரித்தது.
2021-ஆம் ஆண்டு ஐஐபி 0.6% சரிவைக் கண்டது. 2021 டிசம்பரில் இது 0.7 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்தது.
2021-ஆம் ஆண்டு 2.4 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்த சுரங்க துறையின் உற்பத்தி நடப்பாண்டு ஜனவரியில் 2.8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.
0.9 சதவீதம் பின்னடைந்திருந்த உற்பத்தி துறையின் செயல்பாடும் கடந்த ஜனவரியில் 1.1 சதவீதம் உயா்ந்தது. மாறாக, கடந்தாண்டு ஜனவரியில் 5.5 சதவீதம் அதிகரித்திருந்த மின் துறையின் உற்பத்தி நடப்பாண்டில் 0.9 சதவீதம் சரிவைச் சந்தித்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரியில் ஐஐபி 13.7 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 12 சதவீத பின்னடைந்திருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது .