உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், ஷாஹி இத்காஹ் மசூதி உள்ளது. இங்குள்ள கத்ரா கேஷவ் தேவ் கோவில் தான், பகவான் கிருஷ்ணனின் ஜன்ம பூமியாக கருதப்படுகிறது.கிருஷ்ண ஜன்ம பூமி வளாகத்தை ஆக்கிரமித்து, ௧௭ம் நுாற்றாண்டில், ஷாஹி இத்காஹ் மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மசூதியை அகற்ற கோரி, மதுரா நீதிமன்றத்தில் ஒரு குழுவினர், ௨௦௨௦ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை, மதுரா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதே கோரிக்கையை வலியுறுத்தி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜனவரியில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். மனுவை வழக்கறிஞர் வழியாக தாக்கல் செய்யாமல், தானே நேரடியாக வந்து தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வழக்கறிஞர் வாயிலாக அதே மனுவை மனுதாரர் தாக்கல் செய்தார். இதை, தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுள்ளது.