மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலில்,வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு உளவுத்துறை தெரிவித்தது.பயங்கரவாத தடுப்பு படை போலீசார், போபாலில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். போபாலில் இரண்டு வீடுகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்., நேற்று முன்தினம் இரவு அந்த வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து நான்கு பேரையும் கைது செய்தனர். அந்த வீடுகளில் இருந்த வெடிகுண்டுகள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.விசாரணையில் அவர்கள் நான்கு பேரும், வங்க தேசத்தில் செயல்படும் ஜே.எம்.பி., எனப்படும், ‘ஜமாயத் உல் பங்களாதேஷ்’ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.