குடிநீர் இணைப்பு
தமிழக முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றார். உடனே அதிகாரிகள், அவரது தாயார் வசித்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கினர். அதற்கு முன்பு வரை அவர் பொது குழாயில் நீர் பிடித்து பயன்படுத்தினார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், தனது தாயாருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கக்கூடாது. உடனே குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அந்த குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது மிக எளிமையாக வாழ்ந்தனர்.
மதிய உணவு திட்டம்
,ஒரு முறை மதிய நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது குழந்தைகள் சாலைகளின் ஓரமாக விளையாடி கொண்டிருந்தார்களாம். உடனே காரை நிறுத்திய காமராஜர், அந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் ஏன் இங்கு விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு அதிகாரிகள், வீட்டில் இருந்தால் தான் தனது தந்தை உழைத்து கிடைக்கும் பணத்தில் உணவு வாங்கி வந்து கொடுப்பார். பள்ளிக்கு சென்றுவிட்டால் பசியோடு இருக்க வேண்டும் அல்லவா. அதனால் தான் அந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறினார்களாம். உடனே காமராஜர், நாட்டிலேயே முதல் முறையாக மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார்’’ என்றார். காமராஜரின் எளிமை மற்றும் அவரது செயல்பாடுகளை பா.ஜனதா உறுப்பினர்கள் பாராட்டி பேசி புகழாரம் சூட்டினர்.