‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் காண பா.ஜ., இலவச ஏற்பாடு

0
417

தமிழகத்தில் பா.ஜ., சார்பில் பல தியேட்டர்களில் காட்சிகள் ரிசர்வ் செய்யப்பட்டு, பொதுமக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று, புரூக்பீல்டு மாலில் உள்ள தியேட்டரில் இரண்டு காட்சிகள் பொதுமக்கள் இலவசமாக காண அனுமதிக்கப்பட்டனர்.
பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறுகையில், ”காஷ்மீரில் பண்டிட் மக்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றிய படம் இது. மறைக்கப்பட்ட வரலாற்றை இந்த படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். அதனால் இலவச காட்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here