இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா

0
349

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாகவும் அந்நாட்டு மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பும் கரைந்தது.இதன் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் விலை, பால் விலை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.
இலங்கை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை அரசு நாடி உள்ளது. இதனிடையே, இந்திய அரசும் அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.கடந்த மாதம் ரூ.3,750 கோடிக்கு கடன் உதவி வழங்கியது. இதை எரிபொருள் இறக்குமதிக்கு இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டது. கடன் உதவி கேட்டு சமீபத்தில் இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லி வந்தார். பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here