பேராயருக்கு கறுப்புக் கொடி

0
317

புதுச்சேரி, கடலூர் பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர், கடந்தாண்டு மே மாதம் இறந்தார். இதனால், கேரள பேராயர் பீட்டர் அபீர் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். தற்போது, உத்தரப் பிரதேம் மீரட்டை சேர்ந்த பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், இங்கு புதிய பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுவை, கடலூர் பகுதிகளில் 75 சதவீதம் பட்டியலின கிறிஸ்தவ மக்கள் உள்ளதால், அந்த சமூகத்தை சேர்ந்த பேராயரை நியமிக்கக் கோரி கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில் தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் கறுப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here