மணிப்பூரில் 3-வது நாளாக அமித்ஷா ஆலோசனை

0
273

வன்முறை மற்றும் கலவர சம்பவங்களால் சீர்குலைந்து கிடக்கும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 29-ந் தேதி மணிப்பூர் சென்றார். 4 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆய்வு நிகழ்ச்சிகள் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இதில் முக்கியமாக, மியான்மரை ஒட்டிய எல்லை நகரான மோரேக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பின்னர் மோரேயில் குகி பழங்குடியின தலைவர்களை சந்தித்து பேசினார்.பிற பழங்குடியின குழுக்களின் பிரதிநிதிகளும் அவரை சந்தித்து பேசினர். அப்போது மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here