மசூதியில் மானபங்கம்

0
471

திட்டக்குடியை சேர்ந்த ஒரு பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து அவரது கணவரும் உறவினர்களும் அவருக்கு பேய் பிடித்திருப்பதாகக் கருதி அப்துல் கனி என்ற 54 வயது முஸ்லிம் நபரிடம் பேய் ஓட்ட அழைத்துச் சென்றனர். அவர், அந்த பெண்ணின் உறவினர்கள் கைகளில் கருப்புக் கயிற்றை கட்டிவிட்டு வெளியில் சென்று அமரும்படி கூறி அனுப்பினார். பிறகு அந்த பெண்ணின் தலையை பிடித்து தன் மடியில் போட்டு, சில ஊதுபத்திகளின் புகையை நுகரவைத்து மயக்கமாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். எப்படி பேய் ஓட்டுகிறார் என எதேச்சையாக ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த கணவர் இக்காட்சியை கண்டதும், ஓடிச்சென்று அப்துல் கனியை தள்ளிவிட்டு தன் மனைவியை காப்பாற்றினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது காவலர்கள் புகாரை பதிவு செய்யாமல் தட்டிக்கழித்துள்ளனர். பின்னர் உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு, அப்துல் கனி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here