ஹிந்துக்களுக்கு மட்டுமே கடை அனுமதி

0
335

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை, ஹிந்து அமைப்பினர் மீதான தாக்குதல், கொலை உள்ளிட்டவற்றை பி.எப்.ஐ, சி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். கடையடைப்பு, தாக்குதல் என தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து ஹிந்து அமைப்பினர் விடுத்த வேண்டுகோளையடுத்து, சமீபத்தில் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஹொசா மாரிகுடி கோயில் நிர்வாகம் மற்றும் ஷிவமோகா கோட்டே மாரிகாம்பா ஜாத்ராவின் ஏற்பாட்டுக் குழுவும் தங்களது ஜாத்திரை விழாவில் ஹிந்து விற்பனையாளர்களுக்கு மட்டுமே கடைகளை ஒதுக்க முடிவு செய்தன. அந்த வரிசையில், தற்போது கர்நாடக மாநிலம் புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகான்லிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் ஜாத்திரை திருவிழாவில் ஹிந்து சமூகத்தினருக்கு மட்டுமே தற்காலிக கடைகளை ஏலம் விட அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here