உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரகண்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார். இந்நிலையில், முதல்வர் தாமி தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.