சுதந்திரம் 75

0
235

         நாம் நம் நாட்டின் விடுதலையின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நமது சுதந்திர போராட்டத்தின் நோக்கம் வரலாறு, தியாகம் ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை முழுமையாக நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் ஆக்கிரமிப்பு பொருளாதார சுரண்டல் மதமாற்ற மோசடி இவை எல்லாவற்றிற்கும் மேலாக தேச பிரிவினை என்று ஆங்கிலேயர்களால் நமது ஸ்வதர்மத்தை நீர்த்துப்போக செய்தார்கள் பலகீனப்படுத்தினார்கள்.

        200 ஆண்டுகளாக பாரதத்தை அதன் வளத்தை சுரண்டி கொள்ளை அடித்து அதன் செல்வமக்களை ஏழ்மையில் தள்ளிய ஆங்கிலேயரை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்தனர். அத்தகைய சுதந்திர தாகம் கொண்ட வீரர்களின் தியாகத்தால் தான் நாம் சுதந்திரம் பெற முடிந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

        நம் தேசம் அந்நிய அரசாட்சியையோ,அடிமைத்தனத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை தொழிலாளர்கள், விவசாயிகள் மலைவாழ் மக்கள் என்று அனைவருமே அன்னிய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை எதிர்த்து விடுதலைக்காக பல்வேறு நிலைகளில் வியத்தகு போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல வீர தீரர்களின் தியாகங்கள் வரலாற்றில் இடம்பெறாமல் கூட போயிருக்கலாம். தியாகங்களை தியாக புருஷர்களை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுங்கள்.

நீண்ட நெடிய நம் சுதந்திரப் போராட்டத்தின் நோக்கம் அரசியலில் சுதந்திரம் பெறுவது மட்டுமல்ல நமது சுய தன்மையை மீட்டெடுப்பதாக இருந்தது ஆங்கிலேயர்களின் சுரண்டல் மற்றும் கொடுங்கோல் தன்மையை கொண்ட ஆட்சியை விரட்டி வெற்றி கொள்ளாவிட்டால் நம்முடைய பாரம்பரியத்தை மீட்டெடுக்காவிட்டால் சுதந்திரம் பெறுவது அர்த்தமற்றதாகிவிடும்.மகரிஷி அரவிந்தர் மற்றும் பல மகான்கள் முன்னெடுத்த விஷயமான சர்வோதயா சுயராஜ்யம் விஷயங்களை கட்டமைக்கவேண்டியுள்ளது.

   முதலாவதாக – சர்வோதயா எல்லோரையும் மேம்படுத்தி உயர்த்துவது எல்லோரையும் என்பது நிலம் நீர் பணம் விலங்குகள் என்று அனைத்தின் பாதுகாப்பும் மேம்பாடும் அடங்கும்.

  இரண்டாவதாக – சுயராஜ்யம் பரவலாக்கப்பட்ட பொருளாதாரம் நிர்வாகம் மூலமாக சுயராஜ்யம் அமைய வேண்டும்.

மூன்றாவதாக   சுதேசி    -உள்ளூர் பொருளாதாரம்

உள்ளூர் உற்பத்தி வினியோகம் ஆகியவற்றை மேம்படுத்த உள்ளூர் சந்தைகளை ஊக்குவித்தல் முன்பு சுதேசி என்பது சுயசார்பு பொருளாதார என்ற அளவில் பார்க்கப்பட்டது ஆனால் தற்போது சமூக கலாச்சார வாழ்வியல் முறையாக உபதேசி பார்க்கப்படுகிறது

இந்த சர்வோதயா ஸ்வராஜ்யம் சுதேசி என்ற இந்த மூன்றிலும் சுயம் என்ற பொதுவான இடை இருப்பதை நாம் உணர முடியும். இந்த மூன்று விஷயங்களை நாம் ஊன்றி கவனித்தால் இவைகளை நமது பாரத சுயமரியாதையை சுயசார்பை ஆங்கிலேயர்கள் எவ்வாறு பல பல யுத்திகள் மூலம் சிதைத்தார்கள் என்பதை உணர முடியும் அந்நிய ஆட்சி முறைக்கு அந்நிய மதங்களை அழுவதற்கும் நம் மக்கள் எவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் உணரமுடியும். மதமாற்றம் கலாச்சார சீரழிவு ஆகியவை மேற்கத்திய நாகரிகம் என்ற பெயரில் நம்மை ஆக்கிரமித்து நமது சுயமதிப்பை அழிக்க முனைந்தது அழிக்கவும் செய்தது இந்த தருணத்தில் நாம் நமது உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகள் கிறிஸ்துவ மதமாற்றக்காரர்களின் தவறாக சித்தரிக்கப்பட்ட நம் தேசத்தின் ஆன்மாவை அடையாளப்படுத்துவதை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்போம் நாம் அனைவரும் பாரதீயர்கள்     என்ற ஒற்றுமை உணர்வு மேலோங்க செய்வோம்.

                                            ஜெய்ஹிந்த்.

                                                                                       ஸ்ரீ சந்திரசேகர் ஜி

                                                                                balasekaran66@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here