பிரதமர் நரேந்திர மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் அவருடனான தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மோடி ஸ்டோரி (modistory.in) இணையதளத்தில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர், பிரதமர் மோடியுடனான தங்களது சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஏராளமான புகைப்படங்களும், அவரை சந்தித்தவர்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன.பாஜகவினரும் மத்திய அமைச்சர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மோடி ஸ்டோரி என்பது பிரதமர் மோடியின் வாழ்க்கையிலிருந்து எழுச்சியூட்டும் தருணங்களைச் சேகரிப்பதற்காக ஒரு தன்னார்வ இயக்கமாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு, தங்களது வாழ்க்கைப் பயணத்தில் பிரதமரை சந்தித்தவர்கள், அவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் எழுச்சியூட்டும் வகையில் விடியோ/ஆடியோ/எழுத்து வடிவில் இந்த இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.