இலங்கை மற்றும் பாகிஸ்தானில், ஒரே நேரத்தில் கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது, அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தி, இரு நாடுகளையும் கலங்கடித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டு உள்ள பிரச்னைகள், சிக்கல்களுக்கு, சீனாவிடம் இருந்து வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.உலகின் சர்வ வல்லமை படைத்த நாடாக விளங்க, அமெரிக்கா, ரஷ்யா, சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது, சர்வதேச அளவில் வர்த்தகப் போராகவும் மாறி உள்ளது.சீனா தன் வலிமையை காட்ட, பல நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி கடன்களை அள்ளி வழங்கியுள்ளது. தெற்காசியாவில் மட்டும், சீனா வழங்கிஉள்ள கடனின் அளவு, 35 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, கடந்த சில ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதுமிக மோசமான பொருளாதார நிலையால், மின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, கையை கடிக்கும் விலைவாசியால், அந்த நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், அங்கும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.