அய்யங்காளி

0
278

 

1. திருவிதாங்கூர் மாகாணத்தில் ஆகஸ்ட் 28,1863 ஆம் ஆண்டு பிறந்தார். பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்.

2. கேரளாவில் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கொடிய ஜாதி வேற்றுமை பாராட்டும் பண்பு இருந்தது.

3. கல்வி என்பது ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே வழங்கப்பட காலத்தில் இவரின் கல்வி ஆசை நிறைவேறவில்லை. ஓணம் பண்டிகையின் பொழுது எல்லா பிள்ளைகளுடனும் இணைந்து பங்குகொள்ள முயன்ற பொழுது அவருக்கு வசைகளே கிடைத்தன. தெருக்களில் மற்ற பிள்ளைகளுடன் சமமாக விளையாட முயன்ற பொழுது, அப்பாவே இவரை இழிவாக பேசிய தருணங்கள் வந்த பொழுது திகைத்து போனார்.

4. மாடுகளுக்கு பதிலாக புலையர்களை கட்டி உழும் கொடிய பழக்கம் நடைமுறையில் இருந்தது. தெருக்களுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்ட காலம். அவற்றை எதிர்த்து கிளர்ச்சி செய்ய முடிவு செய்தார். தெருக்களின் வழியாக மாடுகளை பூட்டிக்கொண்டு மணியோசை எழுப்பியவாறு சென்றார். ஒடுக்கப்பட்ட இன மக்களை ஒருங்கிணைத்து தெருக்களின் ஊடாக சந்தைக்கு போன பொழுது சாலியர் தெருவில் கலகம் உண்டானது. என்றாலும் உரிமைகளை மீட்டெடுத்தார்.

5. அதோடு இல்லாமல் ஒடுக்கப்பட இன பெண்களுக்கு தோள் சீலை அணியும் உரிமையயும் போராடி பெற்றுத்தந்தார். அவர்களுக்கு என்று தனியே பள்ளிகள் இல்லாமல் இருந்த பொழுது அவர்களுக்கு பள்ளியை துவங்கினார். அதற்கு பல தடைகள் வந்த பொழுதும் தன்னுடைய நெஞ்சுரத்தால் அதை செயல்படுத்தினார்.

6. ஆசிரியரை கொண்டு வந்து சேர்ப்பதற்கு படகில் பயணம்,சைக்கிளில் பயணம் என்று பல்வேறு முறைகளின் மூலம் அவரை வர வைத்தார். அப்படியும் பிற பள்ளிகளில் தலித் பிள்ளைகளுக்கு இடம் மறுக்கப்பட்டதை கண்டதும் தொழிலாளர் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். “எங்களின் பிள்ளைகளுக்கு பள்ளியில் இடமில்லை என்றால் உங்கள் வயல் வெளிகளில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று மக்கள் முழங்கவே அந்த கல்வி உரிமை கிட்டியது.

7. மக்கள் சபைக்கு கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சாது சன் பரிபாலன சங்கம் மூலம் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தார். அவரை காந்தி ‘புலைய ராஜா’ என்று அழைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here