உ.பி.யில் கோயிலுக்குள் அரிவாளுடன் புகுந்த இஸ்லாமிய பயங்கரவாதி

0
407

உபி. மாநிலம் கோராக்பூரில் உள்ள கோராக்பூர்நாத் கோயில் உள்ளது. இக்கோயிலை சார்ந்த மடம் உள்ளது. (ஏப். 03) அரிவாளுடன் புகுந்த மர்ம நபர் மத கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்தவர்கள் வெட்ட முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மர்ம நபரை பிடிக்க முயன்ற ஒரு போலீஸ்காரர், மற்றொருவர் படுகாயமடைந்தனர். இது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது.பின்னர் அந்த மர்ம நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அந்த மர்ம நபரின் பெயர் அகமது முர்தாஸ் அப்பாஸி என்பதும், 2015-ல் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் வாங்கியவர் என்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக சட்டம் , ஒழுங்கு டி.ஜி.பி. பிரசாந்த் குமார் , சம்பவ இடத்தி்ல் விசாரணை நடத்தினார். இது குறித்து பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி. பட்டதாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here