டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை விகித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா. அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக ஹிந்தியை பயன்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இது நிச்சயமாக ஹிந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம்.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை ஹிந்திக்கு மாற்றியுள்ன. அங்குள்ள 8 மாநிலங்களும் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயமாக்க ஒப்புக்கொண்டன. அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.