முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலையை சித்தரிக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து, அதனை தடுக்கவும், பா.ஜ.க மீது மத சாயம் பூசவும் பல போலிப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இதற்குப் பதிலளித்த பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, 1990ல் காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பல அரசியல் கட்சிகள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்று கடுமையாக சாடினார். மேலும், காஷ்மீர் வன்முறை நடந்தபோது நான் நேரடி சாட்சியாக இருந்தேன். மத்தியப் பிரதேச தலைவர்கள் கேதார்நாத் சாஹ்னி மற்றும் ஆரிப் பெய்க் ஆகியோருடன் காஷ்மீர் சென்றேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினோம். காஷ்மீர் நிலவரம் குறித்து அறிக்கை தயாரித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பினோம். ஆனால், அன்றைய ஆட்சியாளர்கள் இதற்கு தீர்வு காணவும் , பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறானது. மேலும், இந்த படம், கடந்த காலத்தைப் பற்றிய பாரபட்சமற்ற பார்வைக்கு வழிவகுத்தது. இவ்வாறான வரலாற்றுச் சம்பவங்களை மக்கள் பலர் இன்னும் அறியவில்லை. சொஹ்ராப்ஜி காலத்தில் நடந்த இனப்படுகொலையை ஏன் மக்களிடம் காட்டவில்லை? ஹிட்லர் செய்ததையும் மக்களுக்கு காட்டவில்லை. உக்ரைன் நெருக்கடியை மக்களுக்கு முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான உறுதியுடன் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மக்கள் பாடம் கற்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.