உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் இலங்கை தத்தளித்து வருகிறது. இதுவரை இலங்கை காணாத மோசமான பொருளாதார நெருக்கடி இது என்கின்றனர். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏப்ரல் 1 முதல் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விலைவாசி விண்ணை தொட்டது, இலங்கையின் பணமதிப்பு கடும் சரிவை சந்தித்தது ஆகியவை இந்த நெருக்கடிக்கு உடனடி காரணங்கள் என்கின்றனர்.இலங்கைக்கு நட்பு நாடு என்கின்ற வகையில் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுவரை இலங்கைக்கு 270,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்கியுள்ளது. முன்னதாக அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி அறிவித்துள்ளது.இந்தாண்டின் ஜனவரி தொடங்கி தற்போது வரை இந்தியாவின் உதவி சுமார் ரூ.18,000 கோடியை தாண்டியுள்ளது. இதற்கிடையே இந்தியா காய்கறிகள் மற்றும் தினசரி தேவைக்கான ரேஷன் பொருட்களை அனுப்பியது. அது ஞாயிறன்று கொழும்பு சென்று சேர்ந்தது.