திண்டுக்கல்லில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியது : சுதந்திரம் பெறுவதற்கு முன், 12 சதவீதம் பட்டதாரிகளே இருந்தனர். சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளில் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா கணினி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.ஐ.டி., துறையில் இந்தியா, உலகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது. அதிக மக்கள் தொகை, சிறந்த பேராசிரியர்கள், நிறைய தலைவர்கள் இருக்கின்றனர். எனினும் வளரும் நாடாகவே இருக்கிறது. முழுமையான வளர்ச்சியை இன்னும் அடையவில்லை. இந்தியா முன்னேற்றம் அடைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில், 10 காரணங்களில் முதலாவதாக இருப்பது, கல்வியில் முன்னேற்றம் அடையாதது. இந்தியா முன்னேற, முதுகெலும்பாக கல்வி மட்டுமே இருக்க முடியும். கல்வி, சுகாதாரம், வருமானம் அடிப்படையில் 180 நாடுகளில், இந்தியா 131வது இடத்தில் உள்ளது.