ஆமதாபாத்-குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள கேசவநாத் ஆஸ்ரமத்தில், ஸ்ரீஹரீஷ் கல்வி அறக்கட்டளை சார்பில், 108 அடி உயர ஹனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தச் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.