மணிப்பூரில், முதல்வர் பீரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. ஆறு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, மணிப்பூர் முதல்வராக பீரேன் சிங் கடந்த மாதம் ௨௧ல் மீண்டும் பதவியேற்றார். அவருடன் ஐந்து அமைச்சர்கள்பதவியேற்றனர்.இந்நிலையில், பீரேன் சிங் தன் அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார். புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு, கவர்னர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதையடுத்து, பீரேன் சிங் அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை 12 ஆகஉயர்ந்தது. இதில், 10 பேர் பா.ஜ.,வையும், இரண்டு பேர் தேசிய மக்கள் கட்சியையும் சேர்ந்தவர்கள்.பீரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சிக்கு, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், கூகி மக்கள் கூட்டணி மற்றும் சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ள காங்கிரஸ் மட்டுமே, சட்டசபையில் எதிர்க்கட்சியாக உள்ளது.