டில்லியில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை

0
205

புதுடில்லியில் இன்று ஹனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியையொட்டி நடந்த ஷோபா யாத்ராவின் போது இரு சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து வன்முறையாக மறியது. இதில் பல போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

கலவரக் காரர்கள் கல்வீச்சு மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இச்சம்பவத்தில் வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீசார் அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இது குறித்து டில்லி போலீஸ் அதிகாரி அன்யேஷ் ராய் கூறியது, ‘ ஹனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியையொட்டி நடந்த ஊர்வலத்தில் இரு பிரிவினர் மோதலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கல்வீச்சிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here