அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

0
275

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்ரல் 20) 2 நாள் பயணமாக டெல்லி சென்றார்.டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுநீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here