அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பெண் இல்ஹான் ஒமர் , இவர் நான்கு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெ ப்பாஸ் ஷெ ரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் சென்றுள்ளார். இவரது செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியது,அமெரிக்க எம்.பி.,யின் இந்த பயணம் ஏற்புடையதல்ல, இது போன்ற செயல் அவரது குறுகிய அரசியல் மனப்பான்மையை காண்பிக்கிறது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மீறுவது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.