ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் புகுத்துவது தொடர்பான மத்திய அரசின் கொள்கை தொடர்ந்து சிக்கலை உருவாக்கி வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் சர்ச்சைகளையும் தவறான எண்ணங்களையும் மட்டுமே உருவாக்கி வருகிறது. இந்தி தெரியாதவர்களின் உரிமையைக் கட்டுப்படுத்தும் அல்லது பறிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஜனசங்கம் ஆதரிக்கவில்லை. எனவே, மத்திய அரசு குடிமைப் பணி தேர்வாணையத்தின் அனைத்துத் தேர்வுகளும் பிராந்திய மொழியில் நடத்தப்பட வேண்டும் என ஜனசங்கம் கோருகிறது.மேலும், பணி நியமனத்தின் போது, எந்தவொரு குறிப்பிட்ட மொழி அறிவும் கட்டாயமானதாக இருக்கக்கூடாது. மாற்றிடைக்காலத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்த விரும்புவோர் அனுமதிக்கப்பட வேண்டும். அண்மையில், காங்கிரஸ் அரசினால் நிறைவேற்றப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் திருத்த மசோதாவும் மொழித்தீர்மானமும் தவறான நடவடிக்கைகள் ஆகும். பிராந்திய மொழியில் தங்களது பணியைத் தொடர விரும்பும் மாநில அரசுகளுக்குக்கூட இது தடையாக இருக்கும்.மேலும், புது டெல்லியில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி செய்யும் வரை, மெட்ராஸில் தமிழும் அதன் சரியான இடத்தைப் பெறமுடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”
– பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா