ஆர்.எஸ்.எஸ். 3ஆம் ஆண்டு பயிற்சி முகாம் நாகபுரியில் இன்று துவங்கியது.

0
315

 

ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்ட காலத்தில் இருந்து தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்களை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் வருட பயிற்சி முகாம் நடை பெற்று வருகிறது. இரண்டாம் வருட முகாம் இரண்டு மாநிலங்கள் ஒன்று இணைந்து நடைபெற்று வருகிறது. இம்முகாம்கள் 20 நாட்கள் நடக்கும்.

3ஆம் ஆண்டு பயிற்சி முகாம் 25 நாட்கள் நாகபுரியில் நடைபெறும். இதில் நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பர்.

கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்கள் இம்முகாம்கள் நடைபெறவில்லை. இவ்வருடம் நாடெங்கிலும் முகாம்கள் துவங்கி நடைபெற்று வருகிறது.

நாகபுரியில் ரேஷிம்பாக்கில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்ம்ருதி மந்திர் வாளாகத்தில் உள்ள வியாச அரங்கில் இன்று காலை (09/05/2022) 3ஆம் ஆண்டு பயிற்சி முகாம் துவங்கியது.

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத செயற் குழு உறுப்பினர் திரு. பையா ஜி ஜோஷி முகாமினை துவக்கி வைத்தார். துவக்க விழாவில் அகில பாரத வியவஸ்தா பிரமுக் முகாம் பாலக் அதிகாரி திரு. மங்கேஷ் பெண்டே, முகாம் அதிகாரி திரு.அசோக் ஜி பாண்டே (மத்தியபாரத் பிராந்த் சங்கசாலக்) ஆகியோர் மேடை யில் அமர்ந்துள்ளனர்.

735 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சி பெற வந்துள்ளனர். மேலும் 35 ப்ராந்த (மாநில பொறுப்பாளர்கள்) ப்ரமுகர்கள், பயிற்சி அளித்திட 96 சிக்ஷகர்கள் (பயிற்சி அளிப்பவர்கள்) முகாமில் உள்ளனர்.

நமது மாநிலத்தில் இருந்து 2 பேர் முகாம் பொறுப்பில் உள்ளனர். முகாம் சேவா ப்ரமுக்காக ஷேத்ர சேவா ப்ரமுக் (தென் பாரத) திரு. கே. பத்மகுமார், சஹ ஷாரீரிக் (உடற்பயிற்சி அளிக்கும் பொறுப்பு) ப்ரமுக் ஆக திரு. ஏ.சி. பிரபு (திருப்பூர்) ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here