காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ‘ஹைபிரிட்’ பயங்கரவாதிகள் கைது

0
198

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பெமினா பகுதியில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் உள்ள ‘ஹைபிரிட்’ பயங்கரவாதிகள் 4 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர். 4 பிஸ்டல்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. பயங்கரவாத குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு முறையே தாக்குதல் நடத்த பயன்படுத்தி கொள்ளும். கடந்த 2021ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20க்கும் கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.தாக்குதல்களில் இதுபோன்ற ‘ஹைபிரிட்’ வகை பயங்கரவாதிகளே ஈடுபட்டு உள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்களை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுக்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ளாமல் தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக உள்ளது என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here