அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) வெள்ள அறிக்கையின்படி, மே 14 வரை, வெள்ளத்தின் முதல்நிலையில்ஆறு மாவட்டங்களில் உள்ள 94 கிராமங்களில் மொத்தம் 24,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் – கச்சார், தேமாஜி, ஹோஜாய், கர்பி ஆங்லாங் மேற்கு, நாகோன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ).
கவுகாத்தி (அஸ்ஸாம்): அசாமின் ஆறு மாவட்டங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட முதல் வெள்ளப்பெருக்கால் சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்களில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
அஸ்ஸாம் மற்றும் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து, பல ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, கோபிலி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்கிறது.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 1732.72 ஹெக்டேர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கச்சார் மாவட்டத்தில் மட்டும் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவம், துணை ராணுவப் படைகள், SDRF, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் சனிக்கிழமையன்று கச்சார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2,150 பேரை மீட்டனர்.
ஹோஜாய், லக்கிம்பூர், நாகோன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.