அசாசுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் குஜராத் பிரிவுத் தலைவர் டேனிஷ் குரேஷி தனது டுவிட்டர் பதிவில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் குறித்து கேள்வி எழுப்பியதுடன் ஹிந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் குறித்து அநாகரீகமான, ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும்படியான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரோடா மற்றும் பல்டி காவல் நிலையங்களில் அவர் மீது தனித்தனி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குரேஷி மீது மத நல்லிணக்கத்தை மீறியதற்காகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அகமதாபாத் சைபர் கிரைம் கவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த பதிவை கண்டித்துள்ள ஹிந்து துறவி டாக்டர் ஜோதிர் நாத் சுவாமி, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரும்பான்மை சமூகத்திடம் டேனிஷ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.