உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள சர்ச்கைக்குரிய ஞானவாபி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு சீல் வைக்கவும், அந்த இடத்திற்கு மக்கள் செல்லவும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோயில் (கே.வி.டி) அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் நாகேந்திர பாண்டே, காசி விஸ்வநாதர் சிலை கிடைத்ததால் அந்த இடம் எப்படி ‘வசுகானா’ ஆக முடியும், அதற்கு வாய்ப்பில்லையே? ஞானவாபி அமைப்பில் இருப்பதாகக் கூறப்படும் சிவலிங்கத்திற்கு முறையாக பூஜைகள் செய்ய அந்த சிவலிங்கத்தை காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், ஞானவாபி வளாகத்தில் நட்த்தப்பட்ட ஆய்வின்போது சிவலிங்கம் காணப்பட்ட வசுகானாவுக்கு அருகில் உள்ள சுவரை இடிக்க வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துக்கள் தரப்பு சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார்.