வேளாண் துறையில் மத்திய அரசின் புதிய அறிவிப்பு

4
433

தோட்டக்கலைத்துறையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வேரில் விளைபவை, பூக்கள் ,தேங்காய், முந்திரி, கோகோ மூங்கில் போன்றவை தோட்டக்கலைத்துறை பயிர்.

மத்திய அரசானது விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற வாக்குறுதியை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் தோட்டக்கலைத் துறையில் ஒரு புதிய மாற்றம். கடந்த 31.05.2019 அன்று மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

திட்டத்தின் பெயர் தோட்டக்கலை கிளஸ்டர் மேம்பாட்டுத்திட்டம். தோட்டக்கலை விளை பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், தோட்டக்கலை கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி உள்ளது. இது மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படும். இத்திட்டமானது அடையாளப்படுத்தப்பட்ட கிளஸ்டர்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவது ஆகும்.

இதன் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 11 மாநிலங்களில் இருந்து 53 கிளஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதன் முதல் படியாக 12 கிளஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 கிளட்சஸ்

  1. ஆப்பிள் – ஷோபியன்(J&K) and கின்னூர்(HP)
  2. மாம்பழம் – லக்னௌ (UP), கட்ச் (குஜராத்), மஹபூப்நகர் (தெலுங்கானா)
  3. வாழைப்பழம் – அனந்தபூர் (AP),தேனி (தமிழ்நாடு)
  4. திராட்சை – நாசிக் (மஹாராஷ்ட்ரா)
  5. அன்னாச்சிபழம் – சிபாஹிஜாலா (திரிபுரா)
  6. மாதுளை – சோலாப்பூர் (மஹாராஷ்ட்ரா), சித்ரதுர்கா (கர்நாடகம்)
  7. மஞ்சள் – மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ், (மேகாலயா).

இவைதான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளட்சஸ் இடங்களும், பழவகைகளும்.

இவைபோல் தோட்டப்பயிர்களை ஊக்குவிக்க கிளட்சஸ்களை தேர்ந்தெடுத்து திட்டங்கள், வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்படும். தற்போது தோட்டக்கலையில் பழங்களை மையமாக வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புவியியல் – நிலப்பரப்பு அடிப்படையில் பழங்கள் விளைச்சல்களை மேம்படுத்துவதற்கும், தோட்டக்கலை கிளஸ்டர்களின் ஒருங்கிணைந்த மற்றும் சந்தை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளஸ்டர்கள் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசாங்கத்தின் பரிந்துரைகளின் பேரில் நியமிக்கப்பட்ட கிளஸ்டர் டெவலப்மென்ட் ஏஜென்சிகள் மூலமாக செயல்படுத்தப்படும்.

இத்திட்டமானது இந்திய தோட்டக்கலை துறை எதிர்நோக்கும் பெரிய பிரச்சனைகளை தீர்க்கவல்லது. விளைச்சலுக்கு முன், விளைச்சல் நேரம், அறுவடைக்கு பின் உள்ள நிர்வாகம், அவைகளை பொதிந்து அனுப்புதல், சந்தைப்படுத்துதல், அங்கீகார பிராண்டிங் போன்ற சவால்களை வெற்றி பெறச் செய்யும் திறனுடன் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் சங்கங்களின் மூலமாக , இந்த திட்டத்திற்கான தீர்வுகளை காண முடியும். இந்த திட்டத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல, விளைபொருட்களை சர்வதேச சந்தையில் அங்கீகாரப்படுத்துவதோடு (Branding) அதனை முதன்மையாக சந்தைப் படுத்துதல், உலகதரத்திற்கு உயர்ந்ததாக ஆக்குதல் இலக்குகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

பாலசுந்தரம்,
மாநில செயலாளர், பாரதீய கிசான் சங்கம், தமிழ்நாடு
ramabalasundaram55@gmail.com.

4 COMMENTS

  1. மஞ்சளுக்கு தமிழகத்தில் உள்ள ஈரோட்டையும் மத்திய அரசை பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்த வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here