பரமபூஜனிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறு

0
1730

வணக்கம் மக்களே

நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் ஆனால் அரசியலிலும் சரி இந்திய சரித்திரத்திலும் சரி சரியான ஆளுமையை கொடுத்த ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை உருவாக்கிய டாக்டர் ஹெட்கேவார் அவர்களைப்பற்றிய பற்றிய தொகுப்பே இந்த தொகுப்பு.

Video வடிவில்

இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கண்டகுர்தி என்னும் கிராமத்தில் வசித்து வந்த பல குடும்பங்கள் முஸ்லீம் மன்னர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மஹாராஷ்டிராவிற்கு இடம் பெயர்ந்தனர். அது போன்ற ஒரு குடும்பத்தில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தார் டாக்டர் ஹெட்கேவர். டாக்டர் ஜி இளம் வயதிலேயே தந்தை மற்றும் தாய் இருவரையுமே அன்று தலைவிரித்து ஆடிய ப்ளேக் நோயால் இழந்து விடுகிறார். வறுமை வாட்டியபோதிலும் படிப்பில் சிறந்து விளங்கினார் ஹெட்கேவர்.

ஒரு சில நெருங்கியவர்களின் அறிவுரைப்படி ஹெட்கேவர் மருத்துவப்படிப்பை 1915ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடித்தார். எல்லோரையும் போல முழுவதுமாக மருத்துவ சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருந்தால் அவரும் பணக்காரராக மாறி இருக்கலாம். ஆனால் சிறுவயதில் இருந்து பொதுசேவையில் தன்னை இணைத்துக்கொண்ட அவருக்கு மருத்துவ படிப்பை முடித்த பின்னரும் பொது சேவையிலே நாட்டம் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் பால கங்காதர திலகரை, வீர சவர்க்கரை  அவர்களிடம் நட்புக் கொண்டிருந்த இவர். 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தொண்டர்கள் படையின் உதவித் தலைவராகப் பணியாற்றினார்.  மேலும் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு ஓராண்டு கடுங்காவல் சிறைவாசம் அனுபவித்தார்.

சிறையில் இருந்த போது இந்தியா ஏன் பிறநாட்டு ஆக்கிரமப்பாளர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது, என்பதை பற்றி ஆழ்ந்த யோசனையில் யோசிக்கலானார். ஜாதிவாரியாகவும் மொழிவாரியாகவும் பிரிந்து இருக்கும் மக்களால் தேசநலனுக்காக ஓன்று சேர முடியவில்லை என்பதை உணர்ந்த ஹெட்கேவர் தேசநலனை முன்னெடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானித்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்து அதன்படி 1925ஆம் ஆண்டு விஜயதசமி திருநாள் அன்று நாக்பூர் நகரத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை ஒரு சில இளவட்ட இளைஞர்களை கொண்டு உருவாக்கினார். மிக எளிதாகவும், பொருளாதார ரீதியில் எளிதானதுமான ஒரு வழியை டாக்டர் ஹெட்கேவர் கண்டுபிடித்தார். தினம் ஒருமணி நேரம் ஏதாவது ஒரு திறந்தவெளி மைதானத்தில் ஸ்வயம் சேவகர்கள் இணைத்து நாட்டு நலனைப் பற்றி சிந்திப்பார்கள். அப்போது அவர்கள் உடல்பயிற்சி செய்து, தேசபக்தி பாடல்களைப் பாடி ஒரு இணக்கமான மனநிலைக்கு வருவார்கள். அந்த சமயத்தில்  இந்தியாவின் சிறப்பான கடந்தகாலத்தைப் பற்றியும், எதனால் இந்த நாடு பிற நாட்டவரின் ஆட்சிக்கு உள்ளாக நேர்ந்தது என்பது பற்றியும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற மாவீரர்கள் பற்றியும் பேசப்படும். முக்கியமாக இந்த சங்க ஷாஹாவிலும் யார் என்ன ஜாதி என்ற கேள்வி ஒருபோதும் எழுப்பப்பட மாட்டாது. அனைவரும் இந்தியர்கள் அனைவரும் சகோதர்கள் என்ற பேச்சு மட்டுமே இருக்க வேண்டும். அங்கே எந்த தனிநபர் துதியும் இருக்கக்கூடாது. தன்னலத்தைக் காட்டிலும் சமுதாய நலனும் தேசநலனும்தான் முக்கியம் என்ற கருத்து விதைக்கப்படும் என்று சுயம் சகோதரர்களுக்கு கற்றுக்கொடுத்தார் டாக்டர் ஹெட்கேவார்.

அன்றிலிருந்து இதுவரை லட்சக்கணக்கான சங்க பிரச்சாரகர்கள் நாட்டிற்க்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து தேசம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். பாரதம் முழுவதும் சங்க ஸ்வயம்சேவகர்கள் தேசிய புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இன்று சங்கம் பாரத நாடு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது.

முதலில் இருந்தே சங்கம் நேரடி அரசியலில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் சங்க உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்படுவதும் இல்லை. அவனை எடுத்துக்காட்டு மொழியில் 1930 ஆம் ஆண்டு சத்தியாகிரக போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டு டாக்டர் ஹெட்கேவர் கைதானார்.

சங்கத்தின் முதல் சர்சங்கசாலக் ஆக டாக்டர்ஜி தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். பதினைந்து ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்திய சங்கம் இன்று நாட்டின் பிரதம மந்திரி, பல மாநிலங்களில் முதலமைச்சர், மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாகவும், பல மாநிலங்களின் கவர்னராகவும், பல அரசுப் பணிகளில் இருந்து பாரத திருநாட்டை செம்மையாக வழி நடத்தி வருகின்றனர் சுயம் சகோதரர்கள் அவர்களுக்கெல்லாம் விதையாக இருந்தவர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர்.

இறுதியாக 1940ஆம் ஆண்டில் ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்க மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் கடுமையான நோயின் காரணமாக, ராஷ்டிரிய சுயக்சேவக் சங்கத்தின் தலைமைப் பொறுப்புபை எம். எஸ். கோல்வால்கரிடம் ஒப்படைத்து, 21 ஜூன் 1940இல் மரணமடைந்தார்.

நன்றி வணக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here