அஸ்ஸாம் & அருணாச்சலப் பிரதேசத்தின் பல மாவட்டங்கள் வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் நிவாரணப் பணிகளில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வித்யார்த்தி பரிஷத் மாணவர்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதுடன் சேவை மனப்பான்மை யையும் வளர்த்து வரும் மாணவர் அமைப்பாகும்.